வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:09 IST)

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு.. தேர்தல் பிரச்சாரம் செய்வாரா?

கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னர் ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய வகையில் திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டதாக திமுக தலைமை தெரிவித்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்ற கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது காரசாரமான பேச்சை மீண்டும் தொடர்வாரா? தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அநாகரிகமாக பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்து தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva