1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (11:30 IST)

ஆசிரியை மாயமான வழக்கில், சக ஆசிரியர் கைது.. உடலை எரித்துவிட்டதாக வாக்குமூலம்..!

பெரம்பலூரில் ஆசிரியை மாயமான வழக்கில் சக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ஆசிரியை உடலை எரித்து விட்டேன் என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் தீபா, வெங்கடேசன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமாகினர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெங்கடேசன் சென்னையில் தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது ஆசிரியை தீபா வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரப்பட்டார் என்றும் எனவே அவரை கொலை செய்து விட்டேன் என்றும் வாக்குமூலம் கூறியுள்ளார்.

மேலும் கொலை செய்தவுடன் திருமயம் அருகே தீபாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக வெங்கடேசன் கூறிய நிலையில் அந்த பகுதியில் சில எலும்புகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எலும்புகள் தற்போது தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva