வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:16 IST)

தேர்தல் முடிந்தவுடன் ஓபிஎஸ் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார்: ஜெயக்குமார் கணிப்பு..!

தேர்தல் முடிவடைந்த உடன் ஓபிஎஸ் பாஜகவில் சேர்ந்து விடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

ராமநாதபுரத்தில் நேற்று  ஓபிஎஸ் பேசியபோது, ‘அதிமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சியை பாஜக தயவால்தான் நடந்தது என்றும் பாஜக கூட்டணியை இபிஎஸ் முறித்தது உச்சபட்ச துரோகம் என்றும் தான் எப்போதும் பாஜக கூட்டணியில்தான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் கூறியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓபிஎஸ் பாஜகவில் சேர்ந்து விடுவார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவுக்காக தான் ஓபிஎஸ் குரல் உள்ளது, சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஓபிஎஸ் குரல் பாஜகவில் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனி அணியாக போட்டியிடுவது அவரவர் விருப்பம் தாராளமாக அவர்கள் போட்டியிடலாம், ஆனால் அதிமுகவை பொறுத்தவரை மகத்தான கூட்டணி அமையும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, பாஜக இல்லாத ஒரு மெகா கூட்டணியை அதிமுக அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva