1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

இந்தியாவில் 7,447 பேருக்கு கொரோனா: 239 பேர் பலி

India
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!