1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (08:01 IST)

பெண்கள் ஆட்சி செய்யும் இந்த 6 நாடுகளில் கொரோனா பாதிப்பு எப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பெண்கள் கையில் அதிகாரம் உள்ள நாடுகள் சிறப்பாக இந்த பிரச்சனையைக் கையாண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களையும், நாட்டுத் தலைவர்களையும் பாடாய் படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண்கள் ஆட்சியாளர்களாக அதிகாரம் செலுத்தும் ஜெர்மனி, நியுசிலாந்து, பின்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனாவை அவர்கள் சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அவர்கள் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்து பெரும்பாலானவர்களைக் குணப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த நாடுகளில் ஊரடங்கை அறிவித்து அதை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். அதேப்போல மக்கள் அனைவருக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்கான சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளில் இறப்புவிகிதம் மிகவும் கம்மியாகவும் குணமடைவோர் விகிதம் அதிகமாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.