திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:47 IST)

மருமகளுக்கு வந்த கொரோனா தொற்று மாமியாரை பலிவாங்கிய சோகம்

தூத்துக்குடியில் மருமகளுக்கு வந்த கொரோனா வைரஸ் அவரது கணவரையும் மாமியாரையும் தாக்கிய நிலையில் மாமியார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தூத்துக்குடியில் உள்ள லேப் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வரும் ஒரு பெண்ணுக்கு திடீரென கொரோனா தோற்று பரவியது. இதனை அவர் கவனிக்காமல் விட்டதால் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் பரவியதை அடுத்து மூவரும் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் மாமியாரின் உடல்நிலை மிகவும் மோசமானது அடுத்து அவரை வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
தற்போது லேப் டெக்னீசியன் பெண்ணும் அவரது கணவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்