வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (08:30 IST)

5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்யும் டெண்டுல்கர்!

இந்தியா முழுவதும் ஊரடங்கால் தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவு பொருட்களை வழங்குவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசும், பிரபலங்கள் சிலரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மும்பையின் சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்குவதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்பாடு செய்துள்ளார்.