''டிக் டாக் '' நிறுவனம் ரூ.1898 கோடி நிதி உதவி !
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மக்களும் பசி, பட்டிணியால் வாடுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள், நிறுவனங்கள் நிதி உதவி அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளமான டிக் டாக் நிறுவனம் ரூ. 1898 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அமெரிக்க, இந்தியா, இந்தோனேஷியா இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏஜென்சி மூலம் செலவு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.