1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. commercial cylinder rate hiked

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் என்ன விலை?

gas cylinder
ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் இன்று மார்ச் முதல் தேதி என்பதால் சிலிண்டர் விலை மாற்றம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 1,960.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்துள்ளது ஹோட்டல் மற்றும் டீக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு வருவதாகவும் இது வியாபாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனால் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்..