வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (08:01 IST)

தெருவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை.. உலக நாடுகள் கண்டனம்..!

தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை கண்மூடித்தனமாக இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதும் இந்த போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த போரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காசாவில் பாலஸ்தீனிய அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக இருக்கும் நிலையில் அங்கு பசியின் கொடுமை காரணமாக உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர்

அப்போது அங்கு வந்த இஸ்ரேல் படை உணவுக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Edited by Siva