திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (08:03 IST)

சிலிண்டர் விலை திடீர் குறைப்பு.. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில் இன்று திடீரென வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிக பயன்பட சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதுவரை 1999.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 1942 ரூபாய்க்கு இன்று முதல் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக கூறப்பட்டாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Siva