மாணவர்களுக்கு ரூ.1200, சிலிண்டர் விலை ரூ.450, பெண் குழந்தைக்கு ரூ.2 லட்சம்: பாஜக தேர்தல் அறிக்கை..!
மாணவர்களுக்கு 1200 ரூபாய், கேஸ் சிலிண்டர் 450 ரூபாய், பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் என ராஜஸ்தான் மாநில பாஜக வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக சற்றுமுன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிய அதிகரித்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பொருளாதார அடிப்படையில் நடைபெற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1200 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் சிலிண்டர் கேஸ் வெறும் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Edited by Mahendran