செவ்வாய், 11 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (08:26 IST)

இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை குறித்த மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வரும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,929க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை  இன்று முதல் ரூ.4.50 குறைந்து ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே டிசம்பர் 22ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும்  ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி சென்னையில் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 10 நாள் இடை வெளியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 40 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva