1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Big Relief for Students: CBSE Relaxes Three-Language Formula Rules for Classes 7 and 9

7, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு: சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ பள்ளிகளில் தற்போது 7 மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளித்து, அவர்கள் தற்போது படிக்கும் மொழிப் பாட முறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர சிபிஎஸ்இ வாரியம் அதிரடி அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
முன்னதாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் வரும் ஜூலை 1 முதல் மும்மொழிப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படுவதாகச் சுற்றறிக்கை வெளியானது. அதன்படி, மூன்று மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு மொழியையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மாணவர்கள் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், மூன்றாவது மொழிப் பாடத்திற்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கான மதிப்பீடுகள் பள்ளி அளவிலேயே உள் மதிப்பீடாக   மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. 
 
மூன்றாவது மொழி பாடத்தை காரணம் காட்டி எந்தவொரு மாணவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தடுக்கப்பட மாட்டார்கள் என்றும் வாரியம் உறுதியளித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகை கிடையாது: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!