தரமுயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள்: தவெக அரசின் புதிய மைல்கல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் 'இலவச மிதிவண்டி திட்டம்' முதன்முதலில் தொடங்கிவைக்கப்பட்டது. ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம், தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக ஆட்சியில் ஒரு மாபெரும் மறுவடிவத்தைப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் தவெக தலைவர் விஜய் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்படி, இந்த இலவச மிதிவண்டிகளின் தரம் தற்போது வேற லெவலுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பழைய மாடல் மிதிவண்டிகளுக்கு பதிலாக, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்பவும், மாணவர்களின் ரசனைக்கு ஏற்றவாறும் "New 26T (Mountain Bicycles)" ரக மிதிவண்டிகள் முற்றிலும் புதிய பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மிகவும் ஸ்டைலாகவும், அதே சமயம் கரடுமுரடான சாலைகளையும் தாங்கிச் செல்லும் உயர் தரத்துடனும் இந்த புதிய மவுண்டன் பைசைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்குச் செல்லும் தங்களுக்கு இத்தகைய நவீன மற்றும் கெத்தான மிதிவண்டிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்காத பள்ளி மாணவ, மாணவியர் தற்போதைய தவெக அரசின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த புதிய ஸ்டைலான மிதிவண்டிகளை மாணவர்கள் மிகுந்த உத்வேகத்தோடும், பெருமிதத்தோடும் ஓட்டிச் செல்கின்றனர். மாணவர்களின் கல்வித் தேவையை உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்துத் தரமான உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவெக அரசின் இந்த மக்கள் நல நடவடிக்கை, ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Siva
