1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bad weather..Amarnath Yatra postponed

மோசமான வானிலை..அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு!

amarnath
காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

 இந்நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டது.

அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று முடிவடைய உள்ள இந்த யாத்திரைக்கு செல்ல 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த மர் நாத் யாத்திரை தற்காலிகமான நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதனால், புதுடெல்லி, பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமில் இருந்து பக்தர்கள் யாரும் அமர் நாத் குகைக் கோயிலை நோக்கிச் செல்லும் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு – வானிலை மையம்