செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (17:21 IST)

விரைவில் தமிழகத்தில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

kalaignar unavagam
விரைவில் தமிழகத்தில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது என்பதும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த உணவகம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 
 
இன்று டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக தனது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும் அந்த வகையில் விரைவில் கலைஞர் உணவாகும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.