திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (14:39 IST)

சாமி படம் உள்ள பேப்பரில் கறி மடித்த பாய்! – கைது செய்த போலீஸ்!

Uttar Pradesh
இந்து கடவுள்கள் படம் உள்ள நாளிதழ் பேப்பரில் கறி மடித்ததாக உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சாம்பல் பகுதியில் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருபவர் தலிப் ஹுசைன் என்னும் இஸ்லாமியர். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
Uttar Pradesh

இதுதொடர்பாக பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இது பெரும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலிப் ஹுசைனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.