செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (14:17 IST)

டெல்லி-துபாய் விமானம் திடீரென பாகிஸ்தானில் இறங்கியது: என்ன காரணம்?

Flight
டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் திடீரென பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இன்று காலை டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது இந்த நிலையில் திடீரென அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அருகே உள்ள கராச்சி விமான நிலையத்தில் இறங்க அனுமதி கேட்கப்பட்டது.
 
 கராச்சி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து ஸ்பைஸ் ஜெட் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது
 
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும், கராச்சியில் இருந்து அந்த விமானம் துபாய்க்கு செல்லும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.