எனக்கு டைபாய்டு காய்ச்சல்!. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அபிஜித் தீப்கே வெளியிட்ட வீடியோ...
ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா தளம் என்கிற கட்சியை நிறுவியவர் அபிஜித் தீப்கே. இந்த அறிவிப்பை அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதும் பல மில்லியன் இளைஞர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து அந்த சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்ந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக அரசு அந்த சமூகவலைத்தள பக்கங்களை முடக்கியது.. ஆனாலும் போராடி அதை மீட்டு தற்போது ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கமாக கரப்பான் பூச்சி ஜனதா தளம் மாறியிருக்கிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தை ஒடுக்க பாஜக அரசு பல முயற்சிகளையும் செய்தது. காவல்துறையால் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. ஆனால், கூட்டம் வலுப்பெற்றதே தவிர முடிவுக்கு வரவில்லை. தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில்தான் அபிஜித் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த சில நாட்களாகவே என் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ரத்த பரிசோதனை முடிவில் எனக்கு டைபாய்டு இருப்பது உறுதியாகியிருக்கிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.. இருப்பினும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும்.. நாம் இதேபோன்று தொடர்ந்து போராடினால் நமது கோரிக்கை நிறைவேறும்.. போராட்டத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி என அவர் கூறியிருக்கிறார்.