1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 6 workers killed in elevator collapse in building

கட்டிடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி...

மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் முதல்வர்  ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மும்பையில் உள்ள தானேவில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று முக்கிய பணிகள் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் முடிந்து, தொழிலாளர்கள் ஒரு லிப்டியில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிராபாரா விதமான லிப்ட் அறுந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து பற்றித் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.  விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
8 ஜிபி ரேம்.. கேமிங் ஸ்பீட் ப்ராசஸர்! இந்த விலைக்கா? - Lava Blaze 2 Pro சிறப்பம்சங்கள்!