திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:06 IST)

கடவுளுக்கு நன்றி… பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட ரிஷப் பண்ட்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவரால் ஒரு ஆண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை அவரால் விளையாட முடியாமல் போனது. அதே போல உலகக் கோப்பை தொடரையும் அவர் மிஸ் செய்யவுள்ளார்.

இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ரிஷப் பண்ட் தான் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு “இருட்டின் பாதையில் மிகச்சிறிய வெளிச்சத்தையாவது காட்டியதற்கு கடவுளுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.