1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:06 IST)

மும்பையில் நடைபெறும் I.N.D.I.A 3வது ஆலோசனை கூட்டம்.. முக்கிய தகவல் வெளியீடு..!

I.N.D.I.A  கூட்டணி ஏற்கனவே பீகார் மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக நாளை மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு:
 
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியீடு
 
ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. அதன்பின் செப்டம்பர்  1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
செப்டம்பர் 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
Edited by Siva