1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:39 IST)

I.N.D.I.A. கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம்: மும்பை கிளம்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

I.N.D.I.A.கூட்டணியின் ஏற்கனவே இரண்டு கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன் கிளம்பி உள்ளார்.  
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை தோற்கடிப்பதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்து I.N.D.I.A.என்ற கூட்டணி அமைத்துள்ளது. 
 
இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன் மும்பை கிளம்பினார்.  இரண்டு நாட்கள் நடைபெறும் என்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான லோகோ உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பாட்னா, பெங்களூரை அடுத்து இந்த கூட்டமும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
Edited by Siva