1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 144 ban in karnataka state simoha region

கர்நாடகாவில் இந்து அமைப்பின் நிர்வாகி கொலை: 144 தடை உத்தரவு!

கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமோகா என்ற நகரில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து சிமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சிமோகாநகரில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவை சிமோகாமாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி பதற்றமான சூழல் உள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அடுத்த கட்டுரையில்
ஏழுமலையானை தரிசிக்க 4 நாட்கள் காத்திருக்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!