தொடர்புடைய செய்திகள்
- திமுகவின் தேர்தல் நாடகம் முடிந்தது..! – பாஜக அண்ணாமலை கருத்து!
- மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்தி! – பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
- அவர் ஓட்ட வேற யாரோ போட்டுட்டாங்களாம்..! – குழப்பமான எல்.முருகனின் ஓட்டு!
- உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரம் தமிழகர்கள்! – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
- பஞ்சாபில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! – ஆட்சியை பிடிப்பது யார்?
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு! – போலீஸ் தீவிர கண்காணிப்பு!
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. சில இடங்களில் இயந்திர கோளாறு, மின்தடை உள்ளிட்ட காரணங்களால் சில மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வார்டு வாரியாக வாக்கு பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்ட பிறகு வாக்கு எண்ணும் மையமும் சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 22ம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ள நிலையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
