செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (08:46 IST)

மத்திய பிரதேசத்திலும் ஹிஜாபுக்கு தடை: மாணவிகள் மத்தியில் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தை அடுத்து மத்தியபிரதேச மாநிலத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் சர்ச்சையானது
 
இதனை அடுத்து தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை என கல்லூரியின் முதல்வர் அறிவித்துள்ளார்
 
ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அதையும் மீறி மத அடையாளங்களுடன் வந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்