செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஏற்கனவே  வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் தற்போது வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
மேலும் இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டி போடுவதால் அந்த கட்சியின் பலம் என்ன என்பது இந்த தேர்தலின் முடிவுகள் தெரியும்