தொடர்புடைய செய்திகள்
- விஜய் இடத்தை சூர்யா பிடிப்பார்... கருப்பு 2 வரும்!.. ஹைப் ஏத்தும் ஆர்.ஜே.பாலாஜி.
- 'கருப்பு 2' உருவாக வாய்ப்பு உள்ளதா? சூர்யா தந்த இன்ப அதிர்ச்சி தகவல்..!
- மின்வெட்டுக்கு காரணம் ஒருசில கருப்பு ஆடுகள் தான்.. அமைச்சர் நிர்மல் குமார்...
- தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டிய கருப்பு!.. சூர்யா செம ஹேப்பி!...
- திரிஷ்யம் 3 படந்தால் கவுந்த கருப்பு!.. கலெக்ஷன் போச்சே!..
கருப்பு 10 நாட்களில் ரூ.250 கோடி! அமரன் சாதனையை முறியடிக்குமா?
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த எதார்த்தமான அதேசமயம் அதிரடியான திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
திரிஷா, நட்டி (நடராஜ்) உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில், சாய் அபயங்கரின் துள்ளலான இசையில் வெளியான 'கருப்பு', வெளியான முதல் நாளிலிருந்தே அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளதால், இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகள் 'ஹவுஸ்புல்' காட்சிகளாகவே நீடிக்கின்றன. தியேட்டர் வாசல்களில் ரசிகர்கள் மேளதாளங்களுடன் கொண்டாடி வருவது ஒரு திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவைப் பொறுத்தவரை இது வெறும் வெற்றி மட்டுமல்ல, ஒரு பிரம்மாண்டமான மறுபிரவேசம். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் ஒரு படம் தியேட்டர்களில் இந்த அளவிற்கான ஒரு மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடிப்பு மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை நேர்த்தி ஆகியவை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.
படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில், உலகம் முழுவதும் 'கருப்பு' திரைப்படம் ₹250 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ₹300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்த அமரன் படத்தின் வசூலை, கருப்பு'திரைப்படம் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் திரிஷ்யம் 3 போன்ற பெரிய மலையாளப் படங்களுடன் போட்டியிட்டு சூர்யா அங்கு தனது அசைக்க முடியாத பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இதே வேகத்தில் சென்றால், வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை 'கருப்பு' தவிடுபொடியாக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கணிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
