1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rj balaji talk about karuppu movie in otyt troll

தியேட்டரில் வசூல் வேட்டை; ஓடிடியில் சறுக்கிய கருப்பு – ஓப்பனாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

கருப்பு
சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட சாதனை படைத்த திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர் சரிவுகளைச் சந்தித்து வந்த சூர்யாவின் மார்க்கெட்டை, ஒரே படப் பொறி மூலம் மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது  கருப்பு . சூர்யாவின் திரைப்பயணத்திலேயே உலகளவில் சுமார் ரூ.340 கோடிக்கும் மேல் வசூலித்து, அதிக வசூல் செய்த முதல் படம் என்ற வரலாற்றுச் சாதனையை இத்திரைப்படம் படைத்தது.
திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி கருப்பு திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களைப் போலவே ஓடிடியிலும் இப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிஜிட்டல் ரசிகர்களிடம் படத்திற்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக, படத்தின் பல காட்சிகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். ஓடிடி தளத்தில் இப்படம் கடுமையான விமர்சனச் சிக்கலில் மாட்டிக்கொண்டது.
 
ஓடிடியில் எழுந்துள்ள இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் படத்தின் பின்னடைவு குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:
 
இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மாதங்கள் வரை தேவைப்பட்டது. ஆனால், பட்ஜெட் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், கிராபிக்ஸ் தரத்தில் சமரசம் செய்ய வேண்டியதாகிவிட்டது. கதையின் முக்கியப் பகுதி என்பதால் அந்த காட்சிகளை எங்களால் நீக்கவும் முடியவில்லை.
 
தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமாக, ஆரவாரத்தோடு பார்க்கும்போது இந்த சின்னச் சின்னக் குறைகள் பெருசாகத் தெரிந்திருக்காது. ஆனால், ஓடிடியில் தனித்தனியாக உற்றுப் பார்க்கும்போது தவறுகள் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டன. ரசிகர்கள் இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில், நெட்டிசன்கள் கண்டுபிடித்துப் பகிர்ந்த தவறுகளை விட, படத்தில் எங்குப் பிழைகள் இருக்கின்றன என்பது எனக்கு முன்பே தெரியும்.
 


































ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த காட்சி அனுபவத்தைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன். இந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்த முறை இன்னும் தரமான, சிறந்த படத்தை உங்களுக்கு வழங்குவேன்.
 
இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். வசூலில் சாதனை படைத்தாலும், ஓடிடி விமர்சனங்களை முதிர்ச்சியோடு கையாண்டு இயக்குநர் பேசியிருப்பது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்
வழக்கமா வேற ஒன்னு நடக்கும்.. இப்ப நீங்க வேற!.. முதல்வரை சந்தித்த கீர்த்தி சுரேஷ்!..