எஸ்.ஏ.சி எடுத்த தவறான முடிவு!.. ரன் படத்தை மிஸ் பண்ணிய விஜய்!...
ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இந்த படத்தை பார்த்தவர்கள் அடுத்த விக்ரமன் கிடைத்து விட்டார் என நினைத்தார்கள். ஏனெனில், அப்படி ஒரு பீல் குட் படமாக ஆனந்தம் இருந்தது. ஆனால் அடுத்த படமே ரன் எனும் ஆக்சன் படத்தை கொடுத்தார் லிங்குசாமி..
இந்த படத்தில் கதாநாயகனாக மாதவனும், கதாநாயகியாக மீரா ஜாஸ்மினும் நடித்திருந்தனர். மீரா ஜாஸ்மின் அறிமுகமான திரைப்படம் இது. 2002ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. மாதவனுக்கும் இது ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.
இந்நிலையில்தான், வருகிற 10-ம் தேதி ரன் திரைப்படம் தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுகு அளித்த பேட்டியில் இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தில் விஜய் நடிக்கவிருந்ததக கூறியிருக்கிறார்..
இந்த படத்தின் கதையை நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சொன்னேன்.. அப்போது விஜய் தமிழன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.. சமூக அக்கறை கொண்ட கதை அது. அதோடு விஜய் அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அப்போது எஸ்.ஏ.சி ஈடுபட்டிருந்தார். எனவே இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் காதலும், ஆக்சனும் கலந்த ஒரு படத்தை நடித்தால் விஜயின் இமேஜ் மாறிவிடும் என்பதால் எஸ்.ஏ.சி மறுத்துவிட்டார். ஆனால், அதன்பின் காதல், ஆக்சன் கலந்த தெலுங்கு படமான ஒக்கடுவின் ரீமேக்கான கில்லி படத்தில் விஜய் நடித்தார் என லிங்குசாமி கூறியிருக்கிறார்.