1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சுமார் 40 ரூபாய் குறைந்து இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5495.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 43960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5965.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!