1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (10:27 IST)

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத பிறப்பு சமயத்தில் 5 நாட்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் என்பதும் அந்த சமயத்தில் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ஐந்து நாட்கள் மாதாந்திர பூஜை நடைபெறும் என்றும் அதன் பிறகு ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 
இன்று மாலை முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதை அடுத்து பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால்  சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran