வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (10:16 IST)

சென்னை ஐஐடி மாணவர்கள் தொடர் தற்கொலை: திலகவதி ஐபிஎஸ் குழு அறிக்கை சமர்ப்பிப்பு..!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த சில மாதங்களில் தொடர் தற்கொலைகள் நிகழ்ந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய திலகவதி ஐபிஎஸ் தலைமையிலான குழு நியமனம் செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் இந்த குழு தற்போது முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
மாணவர்கள் தொடர் தற்கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகள் திலகவதி ஐபிஎஸ் குழுவின் அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
250 முதல் 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐஐடி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்கள் இடையே இணக்கமான சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran