வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:14 IST)

நள்ளிரவில் நல்ல மழை.. சில்லென்று மாறிய சென்னை..!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை நகரமே சில் என்று மாறியது என்பதும், இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, புளியந்தோப்பு, எழும்பூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு மிதமான மழை பெய்தது. 
 
நேற்று பகல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவில் மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்வதால் சென்னையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என  கூறப்படுகிறது.
 
Edited by Siva