1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:19 IST)

அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி இரவில் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை நகரமே குளிர்ச்சியாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மழை குறித்த விவரங்களை தெரிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
Edited by Siva