வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (20:46 IST)

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் 'தல' தோனி ?

vijay, dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமான தோனி, நடிகர்  விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்68.  இந்த படத்தின்  சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் அறிவிப்பு   வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், விஜய் 68 படத்தின் வில்லன் பற்றிய தகவல் பரவி வருகிறது. அதில்,  விஜய்68 படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

விஜய் மற்றும் தோனி ரசிகர்கள் இத்தகவல் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்தும்,விவாதித்தும் வருகின்றனர்.

தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த தோனி, முதல் படமே தமிழில் எல்.ஜி,எம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். எனவே அவர் தமிழில்  நடிகராக  அறிமுகம் ஆவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.