1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Historic Market Crash: Rupee Hits 92 as Middle East War Escalates

9.7 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு..!

பங்குச்சந்தை
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இந்திய பொருளாதாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 92 ரூபாயை கடந்து வரலாற்று சரிவை சந்தித்தது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 82.53 டாலராக உயர்ந்துள்ளது.
 
இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் சுமார் 9.7 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர் முதலீட்டை இழந்துள்ளது. சென்செக்ஸ் 1,710 புள்ளிகள் சரிந்து 78,529 என்ற நிலையை எட்டியது. அதேபோல் நிஃப்டி 50 குறியீடு சுமார் 477 புள்ளிகள் சரிந்து 24,389 என்ற நிலையை எட்டியது.
 
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 3,295 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இருப்பினும், தரமான பங்குகளை சிறுக சிறுக சேமிக்க இதுவே சரியான தருணம் என முதலீட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..