இங்கிலாந்தை அடுத்து அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுத்த ஸ்பெயின்.. டிரம்ப் கொந்தளிப்பு..
ஈரானுக்கு எதிரான போரில் இங்கிலாந்தை அடுத்து ஸ்பெயின் நாடும் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயினில் உள்ள தங்களது விமானப்படை தளங்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்பெயின் நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலுமாக துண்டிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
"எங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. தேவைப்படும் இடத்தில் போர் விமானங்களை கொண்டு சென்று நிறுத்துவோம்" என்று டிரம்ப் கொந்தளித்துள்ளார்.
ஏற்கனவே பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரின் ஒத்துழைப்பின்மை குறித்து டிரம்ப் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், இப்போது ஸ்பெயினுடனான உறவை துண்டித்துள்ளது ஐரோப்பிய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த கடுமையான முடிவு சர்வதேச ராஜதந்திர உறவுகளில் ஒரு மிகப்பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்திலும் போர் போக்கிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
Edited by Siva