வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By c.anandakumar
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (20:52 IST)

எத்தனையோ கட்சிகள் சின்னம் இல்லாமல் தவிக்கின்றன - ஜோதிக்குமார்

தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜோதிகுமார் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழகம் மற்றும் பாண்டிசேரி பகுதியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளில் கரூர், வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 இடங்களில் போட்டியிடுவதாகவும், இந்திய அரசினால் பதிவு செய்யப்பட்ட இந்த கழகம் என்று கூறிய, சாமானிய மக்கள் மற்றும் ஏழை, எளிய விவசாய குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்ட கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் செய்ய மறந்த திட்டங்களை நாங்கள் (தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்) செய்ய இருப்பதாகவும் கூறிய ஜோதிக்குமார், கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக தானே போட்டியிடுவதாகவும், ஏற்கனவே வளர்ந்த கழகங்கள் மத்தியில் எங்கள் கட்சி என்று கேட்கும் மக்களிடையே அந்த கழகம் வளர்ந்த கழகம் மக்களை சொரண்டிய கழகம், ஆகவே ஊன்றுகோல் கூட இல்லாமல் கூட்டணி வைத்து கொண்டு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி வளர்ந்து வருகின்றது. 
 
இந்த கூட்டணிகளுக்கு மாறாகவும், எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றதோடு, எத்தனையோ கட்சிகளுக்கு இதுவரை சின்னங்கள் கூட கிடையாத நிலையில் இந்திய அளவில் தேர்தல் ஆணையம் லஞ்ச் பாக்ஸ் என்கின்ற டிபன் பாக்ஸ் சின்னமாக கொடுத்துள்ளது. ஆகவே தேர்தல் ஆணையம் கொடுத்த இந்த சின்னத்தினை கொண்டு தனித்து நிற்கின்றோம்.
 
இந்திய அளவில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சிறந்து விளங்கும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருப்போம் என்றதோடு, முழுக்க, முழுக்க விவசாயிகளுக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை வழிவகுப்போம் என்றார்.