1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Gym-Based Conversion Racket Busted: Organized Digital Network Exposed in Uttar Pradesh

ஜிம்முக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து மதம் மாற பிளாக்மெயில்.. 50 இந்து பெண்கள் சிக்கினார்களா?

Uttar Pradesh Conversion Racket
உத்தரப் பிரதேசத்தில் ஜிம் வைத்து செயல்பட்டு வந்த ஒருவர், மிகப்பெரிய மதமாற்ற வலைப்பின்னலை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இந்து பெண்கள் இந்த கும்பலால் குறிவைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
சன்னோ என்ற பெண், ஜிம்மிற்கு வரும் பெண்களுடன் நட்பு ரீதியாக பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்று, பின்னர் அவர்களை இந்த கும்பலை சேர்ந்த ஆண்களிடம் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
ஒரு ஜிம்மில் ஒரு பெண் சிக்கவில்லை என்றால், அந்த பெண்ணின் தகவல்களை மற்ற ஜிம்களுக்கு பகிர்ந்து, அங்குள்ள நபர்கள் மூலம் வலையை விரித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை கண்காணித்து, நட்பாக பழகி, பின்னர் அவர்களை மதமாற்றத்திற்கு வற்புறுத்தியுள்ளனர். கைதான ஒருவரின் செல்போனில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய ரகசிய கோப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இந்த கும்பலின் முக்கிய தலைவன் லக்கி அலி மற்றும் இம்ரான் கான் ஆகியோரை தேடி லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, இர்ஷாத் கான் என்ற உத்திர பிரதேச காவல்துறை காவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து கும்பலை காப்பாற்றி வந்துள்ளார். கைதான ஃபரித் அகமது என்பவர், பெண்களை காதலிப்பதாகக் கூறி ரகசியமாக வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்து மதமாற்றத்திற்கு வற்புறுத்தியது அம்பலமாகியுள்ளது. தற்போது இந்த ஜிம்கள் சீல் வைக்கப்பட்டு, சட்டவிரோத பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மோடி சொல்வது டபுள் என்ஜின் இல்லை!.. டப்பா என்ஜின்!.. மு.க.ஸ்டாலின் ராக்ஸ்!..