ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By c.anandakumar
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (20:53 IST)

ஆடம்பரமின்றி வாக்குகள் சேகரித்த தம்பித்துரை

வரும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மக்களவை துணை சபாநாயகரும், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரைக்கு மீண்டும் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர் வயது மூப்படைந்த நிலையிலும் அன்றிலிருந்து இன்று வரை அவர் மட்டுமே தீவிரமாக தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றார்.

கரூர் ஜவஹர் கடைத்தெருவில் உள்ள கடைவீதியில் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் மக்களில் ஒருவராய், எளிய முறையில் தனது வாக்கு சேகரிப்பினை நிகழ்த்தினார். 
 
இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கும் லோக் சபா துணை தலைவர் பதவி பெற்றுள்ளாமே என்ற கர்வம் துளியும் இல்லாமல், ஒரு பாரத பிரதமரே இவர் வந்தால் எழுந்து நிற்கும் பதவி பெற்றும் இவர் எளிய முறையில் வாக்குகள் சேகரித்தது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று அதிகாலை 1 மணியளவில் அறிவிக்கப்பட்டும், அதற்கு முன்னதாக, அ.ம.மு.க வேட்பாளர் தங்கவேல் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அவர்கள் எந்த வித பிரச்சாரங்களிலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.