திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. முக்கிய தொகுதிகள் 2019
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (20:38 IST)

சிக்கலை ஏற்படுத்தும் தினகரன்; சரியும் வாக்குகள்: அதிமுகவிற்கு டஃப் டைம்!

வரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் என தினகரன் அற்வித்திருந்தார். 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து அடுத்து பிரச்சார ப்ளான்தான்.
 
ஆனால், அதற்குள் இந்த தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்தது நிராகரிக்கப்பட்டு பொதுச்சின்னம் குறித்த விவதாங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், தினகரன் அதிமுகவின் வாக்குகளை எப்படியும் பிரிப்பார். ஏனெனில் அவர் சில தொகுதிகளில் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் அப்படிபட்டவர். அதாவது செல்வாக்கு நிறைந்தவர்கள். எனவே அதிமுக மிகவும் கவனமாக தினகரனின் அரசியல் நகர்வுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 
 
குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கரூர், நாகை போன்ற தொகுதிகளில் அதிகமான அளவு அதிமுகவின் வாக்குகளையே தினகரன் பிரிக்கக்கூடும். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியே அதிகமான அளவு பாதிப்பைச் சந்திக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.