வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By c.anandakumar
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (20:53 IST)

கரூர் மக்களவை தொகுதி இருட்டில் இருந்ததை வெளிச்சத்தில் கொண்டு வருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு - ஜோதிமணி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவையின் கரூர் தொகுதியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தார். 
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி., கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களை இருண்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சிக்கான முதல் அத்தியாயம் தான் இந்த வேட்புமனு தாக்கல், யாரிடமாவது அவரது செல் எண் இருக்கா, என்றதோடு, எதனடிப்படையில் அவர் போட்டியிடுகின்றார். 
 
என்னை பொறுத்தவரை 23 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருவதோடு, ராகுல்காந்தியுடன் 6 ஆண்டுகாலமாக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்து வருகின்றேன், தம்பித்துரையின் ஒரே, ஒரு சாதனை என்ன என்றால், அவருடைய பொறுப்பையும், பதவியையும் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் கல்லூரிகளை கட்டி வருவது தான் இவரது சாதனை கரூர் மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, விராலிமலை, மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கல்லூரிகள் இல்லை என்றதோடு, காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஜெயித்தால், கரூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அந்த தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான செயல்பாடு என்று உறுதி கொடுப்பதாகவும், மிகவும், முக்கியமாக போன் எடுப்போம் என்றதோடு மக்களை நேரில் சென்று சந்திப்பேன் என்றார். 
 
மேலும் 10 வருடங்களாக நீங்கள் (தம்பித்துரை) இருந்து விட்டீர்கள். பிறகு என்ன, மத்தியில் எப்படியும் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. அதே போல இடைத்தேர்தலிலும் 18 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. அதிலும் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராவார். இங்குள்ள காவல்துறையினர் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இங்குள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் செய்துள்ளேன் என்றும், மேற்கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்ய உள்ளதாகவும், தோல்வியை கண்டு தான் ஊடகத்தினரை மிரட்டுகின்றார்கள். அதே போல தான் எதிர்கட்சி எங்களையும் மிரட்டுகின்றது. ஆகவே, புகார் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.