மோடி சொல்வது டபுள் என்ஜின் இல்லை!.. டப்பா என்ஜின்!.. மு.க.ஸ்டாலின் ராக்ஸ்!..
மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தேசிய கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
இந்த மேடையில் பேசிய பிரதமர் மோடி திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்
. தமிழகம் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது, தமிழகத்தில் ஆட்சி ஒரு குடும்பத்திற்காக நடக்கிறது, திமுக கலாச்சாரத்தை மதிப்பதில்லை, பெண்களை மதிப்பதில்லை, தமிழக இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். தமிழகத்திற்கு ஒரு டபுள் இன்ஜின் அரசை உருவாக்குவோம் என்றெல்லாம் பேசினார். இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே…
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!
மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் டப்பா எஞ்சின் நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது...