மறைமுகமாக வேலை பார்க்கும் ஸ்வீட் ஸ்டால் நடிகை

cauveri manickam| Last Modified சனி, 2 செப்டம்பர் 2017 (17:57 IST)
தன் மேனேஜரின் ஜாமீனுக்கு, மறைமுகமாக வேலை பார்த்து வருகிறாராம் ஸ்வீட் ஸ்டால் நடிகை. 
சில நாட்களுக்கு முன்பு அக்கட பூமியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையில், பல்வேறு சினிமாக்காரர்கள் சிக்கினர். அதில், ஸ்வீட் ஸ்டால் நடிகையின் மேனேஜரும் ஒருவர். அவர் கைது செய்யப்பட, ‘நான் நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன்’ என்று சொல்லி, அவரை நீக்கிவிட்டதாகக் கூறினார் நடிகை. ஆனால், யாருக்கும் தெரியாமல் அவர் ஜாமீனுக்காக முயற்சித்து வருகிறாராம் நடிகை. காரணம், நடிகையின் வண்டவாளங்கள் அனைத்தும் அந்த மேனேஜருக்கு அத்துபடியாம். கண்டுகொள்ளாமல் விட்டால் அந்தரங்க விஷயங்களை வெளியில் வந்து சொல்லிவிடுவாரோ என்று பயந்து, நண்பர்கள் மூலம் ஜாமீனுக்காக ஏற்பாடு செய்கிறார் என்கிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :