அங்காடி நடிகைக்கும், ‘பிக் பாஸ்’ நடிகைக்கும் அப்படியென்ன தகராறு?

cauveri manickam| Last Modified திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (15:51 IST)
அங்காடி நடிகை நடித்துள்ள படத்தில், ஒரு பாடலுக்கு வாய்ஸ் கொடுக்கச் சொன்னபோது மறுத்துவிட்டாராம் ‘பிக் பாஸ்’ நடிகை.
 
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் எல்லையில்லாத புகழையும், ரசிகர்களையும் பெற்றுவிட்டார் கேரளாவைச் சேர்ந்த ஒல்லி நடிகை. இவர் நிகழ்ச்சியில் கூறிய ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்ற வாக்கியம், வைரலானது. இந்த வாக்கியத்தை வைத்து ஒரு படத்தின் புரமோ பாடலை எழுதிவிட்டனர். இந்தப் பாடலில், நடிகையின் குரலும் இருந்தால் நல்ல ரீச் கிடைக்கும் என்று நினைத்த படக்குழு, நடிகையை அணுகியிருக்கிறது. விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தவர், இந்தப் படத்தில் அங்காடி நடிகை தான் ஹீரோயின் எனத் தெரிந்ததும் மறுத்துவிட்டாராம். இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது ஏற்பட்ட ஈகோ, இன்னும் தொடர்கிறது என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :