சிவ நடிகரின் செயலுக்குப் பெயர் தன்னம்பிக்கையா, தலைக்கனமா?

cauveri manickam| Last Modified சனி, 2 செப்டம்பர் 2017 (15:44 IST)
சிவ நடிகர் செய்வது தன்னம்பிக்கையாலா அல்லது தலைக்கனத்தாலா என்று புரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர் சினிமாக்காரர்கள். 
வாழ்க்கை என்பது விஜய் சேதுபதி மாதிரி சிலரைக் காக்கவைத்து அள்ளிக் கொடுக்கும், தனுஷ் மாதிரி சிலருக்கு படிப்படியான வளர்ச்சியைக் கொடுக்கும், சிவ நடிகர் மாதிரி சிலருக்கு ஒரே பாடலிலேயே உசரத்துக்கு கொண்டுபோய்விடும். அப்படியே உயரே போன சிவ நடிகர், படத்தின் பட்ஜெட், சம்பளம், ஹீரோயின், கலெக்ஷன் என எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கிறார்.

நாம் நினைப்பதெல்லாம் நடக்கும்போது, என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்ற ஒரு குருட்டு ஐடியா வருமில்லையா? சிவ நடிகருக்கும் அந்த ஐடியா வந்திருக்கிறது. ஆயுத பூஜைக்கு ரிலீஸாக வேண்டிய தன் படத்தை, வேண்டுமென்றே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போகிறார். காரணம், தளபதியின் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அவருடன் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கலாம் என்ற ஐடியாவாம்.


இதில் மேலும் படிக்கவும் :