ஸீன் போடும் உலக நாயகன் மகள்

cauveri manickam| Last Modified திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:32 IST)
தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களிடம், ஏகப்பட்ட பந்தா காட்டுகிறாராம் உலக நாயகனின் மூத்த மகள்.
 
இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகையாக மூன்று மொழிகளிலும் வலம் வந்தவர் உலக நாயகனின் மூத்த மகள். அவ்வப்போது பாடல்கள் கூட பாடுவார். ஆனால், எதுவுமே நன்றாக இருக்காது என்பதால், தற்போது அவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. அவருடைய தந்தை இயக்கும் சபாஷ் படம் மட்டும்தான் அவருடைய ஒரே நம்பிக்கை. ஆனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என உலக நாயகனுக்கே தெரியாது.





நிலமை இப்படியிருக்க, தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் ஏகப்பட்ட பந்தா காட்டுவதாகப் புகார் எழுகிறது. கைவசம் எந்தப் படமும் இல்லாததால், ஏற்கெனவே வாங்கிய சம்பளத்தில் இருந்து குறைவாகத்தான் கொடுப்பார்கள். எனவே, பிஸியாக இருப்பது போல் பந்தா காண்பித்தால் பழைய சம்பளம் கிடைக்கும் என்பது நடிகையின் எண்ணமாம்.


இதில் மேலும் படிக்கவும் :