கல்யாணத்தைப் பற்றிக் கேட்டாலே கடுப்பாகும் நடிகை


Cauveri Manickam (Suga)| Last Updated: புதன், 30 ஆகஸ்ட் 2017 (17:36 IST)
ஸ்வீட் ஸ்டால் நடிகையிடம் கல்யாணம் பற்றிக் கேள்வி கேட்டாலே கடுப்பாகி விடுகிறாராம்.

 
 
10 வருடங்களாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார் ஸ்வீட் ஸ்டால் நடிகை. இவருடைய தங்கையும் ஹீரோயினாக நடித்தார். ஆனால், போணியாகததால் தொழிலதிபரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
 
தங்கைக்கு கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகிவிட்டதால், ஸ்வீட் ஸ்டால் நடிகையிடமும் கல்யாணம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
 
ஆனால், அவரோ அதைப்பற்றி பிடிகொடுக்காமல் தான் பேசுகிறாராம். கடந்த வாரம் வெளியான தல படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர், தீபாவளிக்கு ரிலீஸாகும் தளபதி படத்திலும் நடித்திருக்கிறார். 
 
‘இருபெரும் நடிகர்களுடன் நடித்து இப்போதுதான் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. எனவே, கல்யாணத்துக்கு இன்னும் நாலைஞ்சு வருஷம் ஆகும்’ என்கிறாராம் ஸ்வீட் ஸ்டால் நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :